JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழ்நாடு 10 Mar, 2016 03:14 PM

தேர்தலில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம்: ராஜேஷ் லக்கானி பேச்சு

Cinque Terre

தேர்தலில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரியில்‌‌, தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்றுப் பேசினார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள குறுஞ்செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை ஆ‌யிரத்து 196 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 700 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ‌லக்கானி கூறினார். அதிகாரிகள் மாற்றம் குறித்து வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு ஆயிரத்து 400 கல்லூரிகளில் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குச்சீட்டு இருந்தாலே வாக்களிக்கலாம் என்றும், வாக்காளர் சேவை மையம் வரும் திங்கட்கிழமையிலிருந்து செயல்படத் தொடங்கும் எனவும் ‌ராஜேஷ் ல‌க்‌கானி கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads