[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

மோடி கட்டப்பஞ்சாயத்து: ஸ்டாலின் புகார்

mk-stalin-complaint-against-narendra-modi

பள்ளிக்கரணை அருகே ஜல்லடையான்பேட்டையில் குளத்தை தூர்வாரும் பணியை மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் மக்களே குளத்தை தூர் வாரியுள்ள நிலையில் அப்பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

மக்கள் நலனுக்காகவே திமுக இதனை செய்து வருவதாகவும், இந்தப் பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் விமர்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதனால் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் திமுக தொண்டர்கள் தூர்வாரும் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளுக்கிடையில் எழுந்துள்ள பிரச்சனைகளில் பிரதமர் மோடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். முதல்வர் பழனிச்சாமி டெல்லி சென்று பிரமரை சந்தித்து பேசியது அரசியல் ரீதியானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close