[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பொன்னாருக்கு கிழக்கும் மேற்கும் தெரியாது: துரைமுருகன் எள்ளல்

durai-murugan-slams-pon-radhakrishnan

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கிழக்கும் தெரியாது, மேற்கும் தெரியாது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் எள்ளலாக கூறினார்.

தமிழகத்தில் திமுக அழியும் நிலையில் இருப்பதாக பாரதிய ஜனதாவின் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருவதற்கு புதிய தலைமுறையின் அக்னீப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பதிலளிக்கையில், பாவம் அவங்க புதுசா வந்திருக்காங்க. எதையாவது சொல்லி பேர் வாங்கலாம்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு திராவிட வரலாறு தெரியாது. பாவம் இந்தக் குமரி ஆனந்தன் பொண்ணு தமிழிசை. கஷ்டப்பட்டு ஏதோ பதில் சொல்லிக்கிட்டு இருக்கு. அந்தம்மாவை குழந்தையாக இருக்கும்போதே தெரியும்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கிழக்கும் தெரியாது. மேற்கும் தெரியாது. ஏதோ பெயருக்கு அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்காங்க. அவருக்கு டெல்லியில என்ன மரியாதைனு தெரியும். மனுஷன் நல்ல மனுஷன் ஆனா வார்த்தை சரியில்ல. தமிழகத்தில் எந்தக்காலத்திலும் திராவிட அரசியல் பேசுபவர்கள் தான் ஆட்சியில் இருக்க முடியும். அதை நாங்கள் திடமாகச் சொல்கிறோம் எனக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close