[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய உச்சத்தில் தங்கம் விலை -ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,196க்கு விற்பனை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து!
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.61 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார்: தேர்தல் ஆணையம்

local-body-elections-before-july-state-election-commission-in-chennai-high-court

உள்ளாட்சித் தேர்தலை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் கூறி இருந்தது.

இதனிடையே, தேர்தலை நீதிமன்ற உத்தரவுப்படி நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக-வின் ஆர்எஸ் பாரதி தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை ஜூலை மாத இறுதிக்குள் நடத்த தயார் என உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் ராஜசேகர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் அளித்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close