[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் அலிபாபா திருடர்கள்: பொன். ராதாகிருஷ்ணன்

pon-radha-krishnan-tell-about-rk-nagar-election

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

ஆர்.கே. நகரிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர், அதிமுகவின் இரு அணிகளும், திமுகவினரும் தேர்தலை நிறுத்துவதற்கான செய‌ல்களில் ஈடுபட்டு வருகின்றன. யார் பணப்பட்டுவாடா செய்தாலும் அவர்களைக் கைது செய்து ஜாமீனில் வெளிவரமுடியாத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக மாற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் 6 ஆண்டு போட்டியிட முடியாத அளவுக்கு சட்டம் தேவை. ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க சதி நடக்கிறது. எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைக்கக் கூடாது என தெரிவித்தார். வீடு வீடாக சென்று கட்டாயபடுத்தி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close