[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

திண்டுக்கல்லிலும் வாடிவாசல் அருகே குவிந்த பொதுமக்கள்..!

jallikattu-supporters-protest-in-dindigul-also

திண்டுக்கல்லில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டி போட்டிகளை தொடங்கி வைக்கலாம் என கூறப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள வாடிவால் முன் குவிந்த ஏராளமானோர், நிரந்தரமாக சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடமாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூரில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கூறி அங்குள்ள கிராம மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனால், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில், முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதனால், நத்தம் கோவில்பட்டியில் உள்ள வாடிவாசல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிரந்தரமாக சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடமாட்டோம் எனக்கூறி அங்குள்ள வாடிவாசல் அருகே ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் முதலமைச்சர் திண்டுக்கல்லிலும் ஜல்லிக்கட்டி போட்டிகளை தொடங்கி வைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close