[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மழை வேண்டி இந்திரவிழா..... கோலாட்டமாடி பெண்கள் வழிபாடு

indhira-vizha-celebrated-in-tirunelveli

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் மழை வேண்டி பெண்களும் சிறுமிகளும் கோலாட்டமாடி இந்திர விழாவைக் கொண்டாடினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ந‌டைபெற்று வரும் விழாவில், தாமிரவருணி பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதையடுத்து மழைவேண்டி துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வேண்டி கோலாட்டமாடி வழிபட்டனர். விழாவில் பெங்களூரு, டெல்லி ,சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது மழை பெய்ய வேண்டி கோலாட்டமாடி தெய்வத்தை வேண்டினால் மழை கண்டிப்பாக பெய்யும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் நடைபெறவில்லை எனவே இந்திர விழா மூலம் தெய்வத்தை வேண்டுவதன் மழை பெய்யும் என்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close