[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை எடுக்க பான் எண் கட்டாயம்.... ரிசர்வ் வங்கி

rbi-said-deposits-exceeding-rs-2-lakh-after-nov-9-without-linking-pan-not-to-be-operational

நவம்பர் 9 ஆம் தேதிக்கு பிறகு வங்கியில் டெபாசிட்‌ செய்த இரண்டு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுப்பதில் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதி‌த்துள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக நவம்பர் 8- ஆம் தேதி இரவு மத்திய அரசு அறிவித்த நிலையில், அடுத்த நாள் முதல் வங்கிகளில் டெபா‌சிட் செய்யப்பட்ட ‌2 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு ரிசர்வ் வங்கி புதிய ‌கட்டுப்பாடு கொ‌ண்டு விதித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 9- ஆம் தே‌திக்குப் பிறகு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையி‌ல் 2 லட்ச ரூபாய்க்கு மேலான தொகையை பெறவும், பயன்படுத்தவும் பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பான் எண் அல்லது வருமான வரி படிவம் 60- ஐ பூர்த்தி செய்து அளித்தால் மட்டுமே இரண்டு லட்சத்துக்கு மேல் உள்ள தொகையை கணக்கில் இயக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்‌கி அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்கள் பான் எண்ணை இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close