[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

கடலுக்கடியில் துண்டிக்கப்பட்ட கேபிள்களால் தொலைதொடர்பு சேவை பாதிப்பு

the-impact-of-telecommunication-cables-because-of-vardah-strom

வர்தா புயலுக்குப்பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செல்போன்களுக்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‌வர்தா புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்கள் சாய்ந்து விட்டன. பல இடங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தாலும் செயல்படாமல் இருக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் சார்பில் வாடிக்கையாளர்க‌ளுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கடலுக்கு அடியில் தங்களது கேபிள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இணையதள வசதியும் முடங்கியது.

செல்போன்களுக்கான இணையதளவசதியும் முடங்கியதால், ஜிபிஎஸ் மூலம் செயல்படும் சில தனியார் நிறுவனங்களின் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் இயக்கமும் பாதிக்கப்பட்டது. சர்வர் பழுது காரணமாக டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பெட்ரோல் பங்குகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்த முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்துடன் இணையதள வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால் பணமில்லா பரிவர்த்தனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close