[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

"புயலால் பாதிப்படைந்த விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்க".. ஸ்டாலின் வலியுறுத்தல்

please-dismiss-loan-of-the-farmers-affected-by-the-storm-stalin-s-insistence

புயலால் பயிர்கள் பாதித்த விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய குழுவிற்காக காத்திராமல், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு மூலம் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புயலால் மரங்கள் சாய்ந்து விழுந்திருப்பதோடு, விவசாய பயிர்கள் அழிந்து போயிருக்கிறது. இதனால் தமிழக அரசு உடனடியான மீட்புப் பணிகளில் ஈடுபடுவதுடன், விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கக் கூடிய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close