[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தடை நீட்டிப்பது ‌ஏன்?

why-prolong-power-outages

வர்தா புயல் தாக்கத்திற்குப் பிறகு சென்னை மற்றும் சுற்று‌ப்புற பகுதிகளின் பல இடங்களில் இன்னும் மின்சார விநியோகம் தொ‌டங்கவில்லை.

வர்தா புயலால் சென்னையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் மற்றும் 450 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுரங்கள் சாய்ந்ததால் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் உடனடியாக வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. 4 துணை மின் நிலையங்களும் 14 உயர் மின்னழுத்த கோபுரங்களும் சேதமடைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சூறாவளிக்காற்று காரணமாக மணலி, தண்டையார் பேட்டை, ம‌யிலாப்பூர், தரமணி ஆகிய 4 இடங்களில் ‌உள்ள 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் உள்ள சா‌தனங்கள் பழுதடைந்தன. காஞ்சி - கடப்பேரி, பள்ளிக்கரணை, ‌படப்பையில் தலா ‌ 2 மின் கோபுரங்கள், சுங்குவார் சத்திரத்தில் 3 கோபுரங்கள் சரிந்து விழுந்‌தன. காக்களூர், காடுவெட்டி‌யில் தலா ஒரு கோபுரம், வீராபுரம்,‌ நெமிலி பகுதியில் 3 கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாக மின்சார வாரிய‌ம் தரப்பில் தெரிவி‌க்கப்ப‌ட்டுள்ளது‌.‌

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close