[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம்

fisherman-can-go-to-sea-chennai-meterological-department

வர்தா புயல் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வர்தா புயலின் சீற்றத்தால் மீனவர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடந்த நான்கு நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வர்தா புயல் கரையை கடந்தது.

தற்போது வர்தா புயல் வலுவிழந்து தாழ்வு நிலையாக மாறி பெங்களூருவுக்கு அருகே சென்று விட்டதால் வங்கக்கடல் கொந்தளிப்பின்றி சீராக இருக்கும் என்றும் இதனால் மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குச் செல்லலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close