[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

அதிமுகவின் தலைமையை ஏற்கும் சசிகலா?... மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்

senior-functionaries-of-aiadmk-urge-thirumathi-sasikala-to-lead-the-party

அதிமுகவுக்கு தலைமை ஏற்குமாறு சசிகலாவை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்குமாறு மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் போயஸ்கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் வலியுறுத்தினர். கட்சியின் மையப்புள்ளியாகச் செயல்பட்டு, கட்சி தொடர்பாக எழும் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் கேட்டுக் கொண்டனர். அதிமுகவுக்கு அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் சசிகலாவிடம் கேட்டுக்கொண்டனர். நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு அவர் உடனடியாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி.நவநீதகிருஷ்ணன், தமிழக அமைச்சர்களான காமராஜ், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செய்தித் தொடர்பாளர்களான சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போன்ற அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்த சசிகலாவே பொருத்தமான நபர் என்று கூறினர். தங்களது கோரிக்கையை சசிகலா ஏற்பார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close