[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் அஜித் குடும்பத்தினருடன் அஞ்சலி

actor-ajith-tributes-of-cm-jayalalithaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஜெயலலிதா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நேற்று மாலை அவரது உடல் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் 2-ஆவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, வெளிநாட்டிலிருந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் நள்ளிரவிலேயே மெரினா சென்று ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close