[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மோடி

modi-is-in-chennai-to-pay-homage-to-jayalalithaa

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.

சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். இறுதி அஞ்சலிக்குப் பின்னர், மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close