[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

முதலமைச்சர் உடல்நிலை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது: ரிச்சர்ட் பீலே

chiefminister-health-is-particularly-worrying-london-physician-richard-beale

உலகின் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பது அறிந்து வருந்துவதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், மற்றவர்களைப் போலவே தானும் மருத்துவ சிகிச்சைக்கு ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வந்த முன்னேற்றத்தால் நம்பிக்கை கொண்டதாகவும் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.

துரதிருஷ்டவசமாக, முதலமைச்சரின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு மாறாக அவரது தவிர்க்க முடியாத சில உடல்நலக் கோளாறுகளால் கூடுதல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருந்ததாகவும் பீலே தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் தற்போதைய உட‌ல்நிலை மிகவும் கவலையளிப்பதாகக் கூறியுள்ள அவர், இதுபோன்ற நிலையிலும் அவரைப் பிழைக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மருத்துவர்கள் செய்து வருவதை தன்னால் உறுதியாகக் கூற இயலும் என்றும் தெரிவித்தார். முதலமைச்சருக்கு மிக‌ச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் பீலே கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் இதுபோன்ற சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய மிகச் சிறந்த நடைமுறையை அப்போலோவில் மருத்துவர்கள் பின்பற்றி வருவதாகக் கூறியுள்ள ரிசர்ட் பீலே, இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் இருப்பதில் இருந்தே முதலமைச்சருக்கு மிக உயரிய சிகிச்சை கிடைத்து வருவது உறுதியாவதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் சிகிச்சை, உலகின் உச்சபட்ச நவீன சிகிச்சைக்கு இணையானது என்று கூறியுள்ள பீலே, முதலமைச்சரின் நலம் குறித்து தனது எண்ணமும், பிரார்த்தனையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்த கடுமையான சூழலில் தனது பிரார்த்தனையை தெரிவிப்பதாகவும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே‌ தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close