[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

தேனி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்த விவகாரம்.. தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

sanitary-workers-treat-patients-in-theni-govt-medical-college-hospital-report-filed-in-tn-govt

தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் எவ்வித தயக்கமும் இன்றி மேற்கொண்டு வந்தது புதிய தலைமுறை கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் ஏற்றுவது, அவர்களுக்கு மருந்துகளை வாங்கி தருவது, விஷம் குடித்து வரும் நோயாளிகளின் வயிற்றை சுத்தம் செய்வது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கையாளுவது என மருத்துவர்கள், செவிலியர்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் இவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி செய்ததை, புதிய தலைமுறை தனது கள ஆய்வில் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து, புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விசாரணை குழு தனது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close