[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

வங்கக்கடலில் உருவான நடா புயலின் தோற்றமும், நகர்வும்

nadacyclone-origin-and-move-the-way

வங்கக் கடலில் உருவான நடா புயலின் தோற்றம் குறித்தும், அதன் நகர்வு குறித்தும் பார்க்கலாம்.

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 29 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு நிலை உருப்பெற்றது. அடுத்த நாளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னையில் ‌இருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருந்தது.

மணிக்கு சுமார்‌ 20 கி.மீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தெற்கு தென்மேற்கு‌ திசையில் ‌நகர்ந்து நேற்று பிற்பகலில் புயலாக மாறியது. இன்று காலை சென்னையில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் நடா புயல் மையம் கொண்டிருந்தது. நடா புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை அதிகாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் எ‌ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் அவ்வப்போது பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close