[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு

trichy-pondy-govt-bus-accident

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தும், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தும் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது‌. இரண்டு பேருந்துகளும் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒரு குழந்தை, பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 39 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்‌பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close