[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல்

smooth-polling-in-thiruparankundram-district-collector

திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெறுகிறதா என்பதை வாக்குச்சாவடி சென்று ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தமாக, 2 லட்சத்து 82 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் இன்று மாலை 5 மணி வரை தங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இதுவரையில், அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close