[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பெட்ரோல் பங்கிலும் பணத்தை மாற்ற முடியவில்லை: கொந்தளிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்

modi-announce-discontinuing-500-1000-rupee-notes-peoples-reaction-in-petrol-punk

பிரதமர் மோடி நேற்று இரவு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தார். அதேநேரம், மருத்துவமனை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் வரும் நவம்பர் 11ம் தேதி வரை 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று தனது அறிவிப்பில் மோடி கூறியிருந்தார். இதனால் பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள், தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற பெரும் சிரமப்பட்டனர்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ‘200 ரூபாய் எனக்கு சவாரி. கஸ்டமரிடம் 500 ரூபாயை வாங்கிக்கொண்டு பெட்ரோல் போட வந்தேன். ஆனால் பெட்ரோல் பங்கில் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் போட வேண்டும் என்கிறார்கள். 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு, 300 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டால், தர மறுக்கிறார்கள். கஷ்டமருக்கு நான் 300 ரூபாய் தர வேண்டும். ஆனால் தரவில்லை. 500 ரூபாய்க்கும் தான் பெட்ரோல் போடுகிறார்கள் இது எங்களை மாதிரி உள்ளவர்களுக்கு மிகவும் கஷ்டம்’ என்றார். காரில் பெட்ரோல் போட வந்த ஒருவர் கூறுகையில், ’கள்ள நோட்டை தடுப்பதற்கான இந்த ஐடியா வரவேற்கத்தக்கது. கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம். ஓவர் நைட்டில் சொன்னதால் கொஞ்சம் பாதிப்பு இருக்கு. இங்ககூட வந்து 500, 1000 ரூபாய் ரவுண்டாகத்தான் கேட்கிறாங்க. 200 ரூபாய், 100 சில்லரை கேட்டா திரும்ப தரமாட்டேங்றாங்க. நம்மகிட்ட இருந்தால் வாங்கிக்கிறாங்க. பெட்ரோல் பங்க் உள்ளிட்ட எல்லா இடத்திலயும் கார்டு மூலமாக ஸ்வைப் ஆப்சன் இருக்கு. ஆனால் பொதுவான மக்கள் கார்டு வைத்திருக்கமாட்டார்கள். கார்டு இல்லாத மக்கள் எல்லாம் தவிப்பார்கள். அவர்களுக்கான மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close