[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

நெல்லையில் குழந்தை கடத்தல் கும்பல் கைது

child-abuction-rocket-busted-in-nellai

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் விற்கப்படும் போது மீட்கப்பட்டு காப்பகத்தில்
ஒப்படைக்கப்பட்‌டனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் ஆண் குழந்தையைக் கடத்தி விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். கீழப்பாவூரை சேர்ந்த அருணாசலம் தேவிகா தம்பதியினர் அதே ஊரை சேர்ந்த நயினார் என்பவரிடம் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கொடுத்து அரசு விதிப்படி குழந்தை வேண்டும் என கேட்டுள்ளனர். பிறந்து சில நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்றை நயினார் மூலம் பெற்ற தம்பதிகள் அரசின் அனுமதி இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அருணாசலம் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் குழந்தையை கடத்தி விற்க முயன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் குழந்தையைக் கடத்திவிற்க முயன்ற கும்பலிடம் இருந்து ஆண் குழந்தை மீட்கப்பட்டதுடன் சம்ப‌வத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close