[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

chennai-meteorological-weather-forecast-for-tamilnadu

‌‌காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடலிலிருந்து விலகி செல்ல வாய்ப்பிருப்பதால் வரும் 6 தேதியிலிருந்து 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பொழிவு குறையும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று தற்போது விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தூரத்தில் மையம் கொணடுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து விலகிச் செல்கிறது. அவ்வாறு விலகி சென்றால் வரும் 6ம் தேதியில் இருந்து 3 அல்லது 4 நாட்களுக்கு மழை குறைந்த நிலைக் காணப்படும்.

சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 30ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ராமஸ்வரம் காங்கேயத்தில் அதிக பட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல் நேற்று காலை நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 60 மி.மீ, மழை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கொடவாசல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 50 மி.மீ. மழையும் பதிவானது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், 920 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஆயிரத்து 100 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டமும் 109 புள்ளி 40 அடியில் இருந்து 109.90 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பாசனத்திற்காக 200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதனால், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலையோரத்தில் இருந்த 50ஆண்டுகள் பழமையான மரம் வேறுடன் விழுந்தது. அதனால், கவுந்தப்பாடி - சிறுவலூர் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால், வெள்ளாங்கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நெடுஞ்சாலைத்துறையினர், மரத்தை அப்புறப்படுத்திய பிறகு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,030 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு 2,000 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக அதிரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close