[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

தீபாவளிக்கு 21,000 சிறப்புப் பேருந்துகள்

diwali-special-bus-announced

தீபாவளியை முன்னிட்டு சுமார் 21,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் இருந்து 26 முதல் 28ம் தேதி வரை 11,225 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். இதே நாட்களில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 10,064 பேருந்துகள் இயக்கப்படும்.

அக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், வேலூர் வழியாக ஒசூர் வரை செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். மதுரை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சேலம், கோவை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.

தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர் பேருந்துகளை பயணிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில், 26, 27, 28ம் தேதிகளில் இந்த 5 பேருந்து நிலையங்களுக்கு 200 மாநகர இணைப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close