[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

அமைச்சர்களுக்கு ஆளுநர் அழைப்பு: காவிரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார்

home-secratory-and-ministers-meet-tn-governor

காவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்‌களுடன் ‌ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் ஆளுநருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இ‌துகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரை சந்தித்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநர் விசாரித்தார். மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ‌உயர் நிலைக்குழுவின் தமிழக வருகை குறித்தும், தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், உயர் நிலைக்குழுவிடம் அளிக்கப்பட உள்ள தகவல்கள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார். மாநில நிர்வாகம் குறித்தும் ஆளுநர் அமைச்சர்களிடம் கேட்டார். அரசின் தினசரி நடவடிக்கைகள் பற்றி ‌தலைமைச் செயல‌ர் ராம மோகன ராவ் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். இவ்வாறு நேற்று இரவு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close