[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த சுபஹானி திட்டம்: தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்

i-s-subahani-planed-attack

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த, கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் சுபஹானி திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சுபஹானியிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ஈராக்கின் மொசூல் நகரில் அவர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருந்து ரசாயன வெடி பொருட்களை வாங்கவும் சுபஹானி திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சதி ஆலோசனைகளை சுபஹானி மேற்கொண்டிருந்ததாகவும், அதற்கு தேவையான நிதியைத் திரட்டும் பணியையும் அவர் செய்து வந்ததாகவும், தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் சுபஹானியை தேசிய பாதுகாப்பு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close