[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் மரணம்... சிபிஐ விசாரணை செய்ய வைகோ கோரிக்கை

aiims-medical-college-student-saravanan-death-vaiko-demanded-cbi-probe

டெல்லியி‌ல், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர் சரவணன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சரவணன் தற்கொலை செய்துகொண்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் உடற்கூறு ஆய்வில் சரவணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் யாரோ விஷ ஊசியை செலுத்தியிருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு மாணவர் சரவணன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர் சரவணனின் குடும்பத்திற்கு மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close