[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

நியுசிலாந்து அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா அணி

south-africa-quicks-wrap-up-new-zealand-for-214

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. மூன்றாம் நாளான இன்று, 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்ற முந்தைய நாள் ரன் எண்ணிக்கையுடன் விளையாடிய நியுசிலாந்து அணி 214 ரன்களில் முதல் இன்னிங்ஸை இழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 77 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ஸ்டைன், ரபடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியுசிலாந்து அணியை விட 267 ரன்கள் முன்னிலை பெற்ற போதும், பாலோ ஆன் வழங்காமல் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close