தன்னுடைய ராஜினாமா மூலம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உண்மை நிலையை வெளிபடுத்த நினைத்தேன் என்று டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராஜாட் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூத்த பத்திரிகையாளர் ராஜாட் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இவர் டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், “டெல்லி கிரிக்கெட் சங்கத்தை என்னால் முடிந்த அளவு நேர்மையாக நடத்த முற்பட்டேன். ஆனால் தற்போது என்னால் அதை சரியாக செய்ய இயலவில்லை. ஆகவே என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன்.
என்னுடைய ராஜினாமா மூலம் நான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய உண்மை நிலையை வெளிபடுத்த நினைத்தேன். ஏனென்றால், இன்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் இருப்பவர்களில் சிலர் ஊழல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தங்கள், வீரர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் அவர்கள் தலையிடுகிறார்கள். இந்த ஊழல் விஷயங்களை சகித்து கொண்டு என்னால் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்திருக்க முடியும். ஆனால் நான் என்னுடைய ராஜினாமா மூலம் உண்மை நிலையை வெளிபடுத்த நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
(ராஜாட் சர்மா)
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜாட் சர்மாவுடன், சிஇஓ ரவிகாந்த் சோப்ரா, கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்களான யாஷ்பால் சர்மா மற்றும் சுனில் வால்சன் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!