[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்

depleted-south-africa-look-for-answers-against-ruthless-indian-juggernaut

இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. 

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

இதற்காக, இரு அணி வீரர்களும் கடந்த சில நாட்களாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கும். இந்தப் போட்டியிலும் வென்று தென்னாப்பிரிக் காவை வொயிட் வாஷ் செய்ய இந்திய அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. அதனால் இன்றைய போட்டியில் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. 

ராஞ்சி மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான் நடந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-ஆஸ்திரே லியா இடையிலான அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்த மைதானம் முதல் 3 நாட்களுக்கு பேட்டிங்குக்கு சாதகமாவும், பிறகு சுழற்பந்து வீச்சுக்கும் உகந்த வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close