[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

அபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!

india-seal-2-0-series-win-with-257-run-demolition

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி.

 வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிய இந்திய அணி, முதலாவது டெஸ்டில்  318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. 2 வது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வந்தது.  இந் திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. ஹனுமா விஹாரி 111 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால் 55, விராத் கோலி 76, இஷாந்த் சர்மா 57 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பும்ரா ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, இஷாந்த் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆனை வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 

கே.எல்.ராகுல் 6 ரன்களிலும் மயங்க் அகர்வால் 4 ரன்களிலும் கெமர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா 27 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்ட மிழக்க, ரஹானேவும் விஹாரியும் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர், 4 விக்கெட்டுக்கு 168 ரன்களாக இருந்த நிலையில் டிக்ளர் செய்யப்பட்டது. ரஹானே 64 ரன்களுடனும் விஹாரி 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்று முன் தினம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றி பெற 423 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி, 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் ஜடேஜா, ஷமி தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். ஹனுமா விஹாரி ஆட்டநாயகன் விருது பெற்றார். 

 ஏற்கனவே அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடர்களை வென்றிருந்த இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அந்த அணியை ஒயிட் வாஸ் செய்து அசத்தி இருக்கிறது
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close