[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ், எம்.எஸ்.தோனி: புகழ்கிறார் ஸ்டீவ் வாஹ்!

mahendra-singh-dhoni-is-still-a-great-player-steve-waugh

’’ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் தோனி. அவரை இன்னும் நம்புகிறேன்’’ என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு தோனியின் ரன் அவுட்டும் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் ஓய்வு பெறக் கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக வும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், தோனியை புகழ்ந்துள்ளார். அவர் கூறும்போது, ’’ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் தோனி. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், அவர் ரன் அவுட் ஆகவில்லை என்றால், அந்த போட்டியை வென்று கொடுத்திருப்பார். நீங்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இல்லை என்றால், அவர் என்ன செய்கிறார் என்று நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்கள். 

மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். நான் இன்னும் அவரை நம்புகிறேன். இந்தியா வுக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களாக ஒரே மாதிரியாகத்தான் அவர் விளையாடு கிறார். தோனி இல்லையென்றால், போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் அனைத்துப் போட் டிகளையும் வென்று கொண்டே இருக்க முடியாது. ஒரு நாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களை விட, அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். 

அந்த அரையிறுதி போட்டியில் விராத் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும்தான் அவர்களின் வெற்றிக்கு காரணம்’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close