[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

காட்ரெல் போல சல்யூட் அடித்த இந்திய வீரர்கள் - எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்!

shami-virat-kohli-mock-cottrell-s-salute-celebration

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் போல சல்யூட் அடித்து கிண்டல் செய்த ஷமி மற்றும் கோலியின் செயலுக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படுத்தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது விக்கெட்டை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் தன் வழக்கமான பாணியில் சல்யூட் அடித்து தன் வெற்றியை கொண்டாடினார். இதனை கிண்டல் செய்யும் விதமாக இந்திய வீரர்கள் ஷமியும், இந்திய கேப்டன் விராட் கோலியும் சல்யூட் அடித்த விவகாரம் இந்திய ரசிகர்களிடையே வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

30தாவது ஓவரில் காட்ரெல் ஆட்டமிழந்து வெளியேறி போகும் போது ஷமி சல்யூட் அடித்து கிண்டல் செய்தார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது விராட் கோலியும் காட்ரெல் சல்யூட்டை கிண்டல் செய்தார். இந்திய வீரர்களின் இந்த செயலுக்கு இந்திய ரசிகர்கள் கூட வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தான் ராணுவத்தில் பணிபுரிந்ததை நினைவுபடுத்தும் விதமாகவே சல்யூட் அடிப்பதாக ஷெல்டன் காட்ரெல் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திய வீரர்களின் கிண்டல் ராணுவத்தை கிண்டல் செய்வது போலத்தான் என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தை இந்திய  கிரிக்கெட் வீரர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்களோ அதே மரியாதையை மற்ற நாட்டு ராணுவத்துக்கும் கொடுக்க வேண்டுமென ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close