[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

sri-lanka-fight-back-to-beat-afghanistan-by-34-runs


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

12 உலகக் கோப்பை தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கள் கருணாரத்னே, குசல் பெரேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து நல்ல தொடக்க நிலையை கொடுத்தனர். 

சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த இலங்கையை ஆப்கன் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி தடுத்து நிறுத்தினார். அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தினார். 33 ஓவர்கள் முடிந்தபோது மழை பெய்ததால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் 41 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 

36.5 ஓவர்களில் இலங்கை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 201 ரன்கள் எடுத்தது.மீண்டும் மழை பெய்ததால், ஆப்கானிஸ்தானுக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close