[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

''உலகக்கோப்பையை தொட்டுப்பாத்த ஒரே ஆளு'' - தென்னாப்பிரிக்காவை கலாய்க்கும் விளம்பரம்!

star-sports-advertisement-about-india-south-africa

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் நாளை நடைபெற உள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவை கலாய்க்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. லீக் ஆட்டத்தில் ஏற்கெனவே இரண்டு முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா நாளை இந்தியாவுடன் மோத உள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் தோல்வி கண்ட தென்னாப்பிரிக்கா அதற்கு அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது. இதனையடுத்து நாளை நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தென்னாப்பிரிக்கா களமிறங்கும். அதேசமயம் முதல் ஆட்டத்தையே வெற்றியோடு தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா களம் காணும்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை கலாய்க்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. உலகக் கோப்பை தொடரில் 1992ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் தென்னாப்பிரிக்கா ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விதத்தில் கோப்பையை தவறவிட்டுவிடுகிறது. இதனை கலாய்க்கும் விதமாகவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. அதில், தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் தங்கள் நாட்டிற்கு இந்தந்த வீரர்கள் இருக்கிறார்கள் என ஒவ்வொருவரின் பெயரை சொல்லி உற்சாகமடைகின்றனர்.

அந்த நேரத்தில் இந்திய ரசிகர் ஒருவர், ''நீங்கள் தான் உலகக்கோப்பையை வென்றதே இல்லையே...? அப்படி இருக்க எப்படி கொண்டாடுகிறீர்கள்’’? என கேள்வி கேட்கிறார். ''உங்கள் நாட்டில் இருந்து ஒரேயொருவர் தான் (கேரி கிறிஸ்டன்) உலகக்கோப்பையை தொட்டு பார்த்திருக்கிறார். அதற்காக நீங்கள் இந்தியாவிற்காகத் தான் நன்றி சொல்ல வேண்டும்'' எனவும் இந்திய ரசிகர் கூறும் வகையில் அந்த விளம்பரம் உள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் கேரி கிறிஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close