[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

இதுஒருநாள் போட்டிதானா? - பாதி நேரத்தை மிச்சம் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல்

umpire-laughs-at-dimuth-karunaratne-free-hit-moments

ஒருநாள் போட்டியாச்சே ரொம்ப நேரம் நடக்கும்ன்னு பார்த்தா அரைநாளில் முடிஞ்சி போச்சி என்று சமூக‌வலைதளங்களில் உலகக்கோப்பை போட்டிகளை கலாய்த்து வருகின்றனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில், மூன்று போட்டிகள் ஒருபக்க ஆட்டமாகவே முடிந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 150 ரன்களுக்கும் குறைவாகவே இலக்கு நிர்ணயித்தன. இதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில், அதிக ரன்கள் கொண்ட ஆட்டங்கள் இனி அரங்கேற வேண்டுமென நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

Image result for 136 all out

நடப்புத் தொடரில் பலமான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கூட 150 ரன்களை கடக்கவில்லை, ஆனால் முதல் ஆசிய அணியாக ஆப்கானிஸ்தான் அணி பலமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 200 ரன்களை கடந்தது. இதை சுட்டிக்காட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானை விட ஆப்கன் அணி சிறப்பான அணி என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

மகிளா ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்ககாரா ஆகியோர் மீண்டும் இலங்கை அணிக்கு விளையாட வந்தால் மட்டுமே, அந்த அணியை கரை சேர்க்‌க முடியுமென சில நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர். இலங்கை அணியின் போட்டி குறைந்த நேரத்தில் முடிவடைந்ததை சுட்டிக்காட்டி, மூன்று மணி நேரம் சேகரித்து விட்டீர்கள் என சில ரசிகர்கள் நகைச்சுவையுடன் பதிவிட்டனர்.

Image result for Dimuth Karunaratne free hit

இலங்கை கேப்டன் கருணரத்னே, ப்ரீ ஹிட் பந்தில் ரன் எடுக்க முயற்சி செய்யாமல், கீழே குனிந்ததைப் பார்த்து களத்தில் இருந்த நடுவரே சிரித்தார். பந்துவீச்சாளர்கள் கூட ப்ரீ ஹிட் பந்தை ஒரு பதம் பார்ப்பார்கள் என ரசிகர்கள் கருணரத்னேவை கலாய்த்து தள்ளினர். களத்தில் வீரர்கள் செய்யும் தவறுகளை, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி கலாய்க்க தவறுவதில்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close