[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சென்னை பேட்ஸ்மேன்களை சாய்க்க ரோகித் செய்த பிளான்..!

no-bowler-has-bowled-two-consecutive-overs-rohit-has-ensured-that-no-batsman-gets-to-see-the-same-bowler-for-too-long-good-tactic-on-a-tough-pitch-to-bat

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதுவே எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. டாஸ் வெல்பவர்கள் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்வார்கள் என்றுதான் கணிக்கப்பட்டது. ஆனால், மாறாக தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தப் போட்டியில் சென்னை அணி பவர் பிளேவில் 32 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டு பிளிசியஸ் 6, வாட்சன் 10, ரெய்னா 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால், சென்னை அணியின் பேட்டிங் மந்தமானது. 

                

சென்னை அணியின் பலவீனம் பவர் பிளேவில் உள்ளது என்பதை கணித்த ரோகித் சர்மா, அதற்காக பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்தார். ஏனெனில், சென்னை அணி தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகளில் பவர் பிளேவில் விக்கெட் இழந்து தடுமாறும். பின்கள வீரர்கள்தான் அணியை காப்பாற்றுவார்கள். 

இன்றைய போட்டியில், முதல் ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இரண்டாவது ஓவரை குர்ணால் பாண்டியா வீசினார். அந்த வரிசையில் மூன்றாவது ஓவரை மலிங்கா வீசவில்லை. சாஹரை அழைத்தார் ரோகித் சர்மா. அந்த ஓவரின் முதல் பந்திலே டுபிளிசிஸ் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை ஜெயந்த் ஜாதவ் வீசினார். அந்த ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். 5வது ஓவரை பும்ரா வீசினார். அதாவது முதல் 5 ஓவரை 5 பந்துவீச்சாளர்கள் வீசினர். அதனால், பந்துவீச்சை கணிக்க முடியாத நிலை ஏற்படும் என ரோகித் கணித்தார். அதற்கு பலனும் கிடைத்தது.

சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close