[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆனார் கிறிஸ் கெய்ல்

chris-gayle-named-vice-captain-of-windies-world-cup-team

உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தில் நடக்கும் இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், ஐபிஎல். தொடரில் மிரட்டும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல், 39 வயதான கிறிஸ் கெய்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கெய்லுக்கு இது 5-வது உலக கோப்பை போட்டி.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணிக்கு அவரை துணை கேப்டனாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. 

இதுபற்றி கெய்ல் கூறும்போது, ’’வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எப்போதும் எனக்கு பெருமை. உலகக் கோப்பை போட்டி ஸ்பெஷலானது. மூத்த வீரராக, அணியின் கேப்டன் உள்ளிட்ட வீரர்களுக்கு உதவும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அணி விவரம்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் அலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், அஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமர் ரோச், ஆந்த்ரே ரஸல், ஒஷானே தாமஸ்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close