[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

முதலாவது தகுதிச் சுற்று: சேப்பாக்கத்தில் சென்னை-மும்பை நாளை மோதல்!

csk-get-to-play-qualifier-1-in-chennai-with-mi

ஐபிஎல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்ததை ஒட்டி, பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. இதில் சென்னை -மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் நாளை மோதுகின்றன.

12 வது ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. கடைசி லீக் போட்டியில் மும்பை -கொல்கத்தா அணிகள் மோதின. இதில் மும்பை அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள்  பிளே-ஆப் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கும் முதலாவது பிளே ஆப் சுற்றுப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் நடக்கும் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) சுற்றில் 3-வது, 4-வது இடங்களை பெற்ற டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன், இரண்டாவது தகுதி சுற்றில் 10- ஆம் தேதி மோதும்.

இறுதிப்போட்டி  ஐதராபாத்தில் 12 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்தப் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close