[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

கொல்கத்தாவை வெல்லுமா ஹைதராபாத் ?

srh-won-the-toss-elects-to-bowl-first-against-kkr

  கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 38லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 10ல் கொல்கத்தா அணியும் 6ல் ஹைதராபாத் அணியும் வென்றுள்ளது. அத்துடன் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ள 5 போட்டியில் 2ல் ஹைதராபாத் அணியும் 3ல் கொல்கத்தா அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அணியை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டியில் விளையாடி 4ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. கடந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள சென்னை அணியை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பாரிஸ்டோவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஐபிஎல் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சே அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளது. இந்த அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ரசீத் கான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் சிறப்பாக பந்துவீசினால் கொல்கத்தா அணிக்கு கடும் சவலாக அமையும்.

கொல்கத்தா இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும் 5ல் தோல்வியும் பெற்றுள்ளது. கடந்தப் போட்டியில் பெங்களூர் அணியிடம் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனினும் அந்தப் போட்டியில் 200 ரன்கள் விட்டுகொடுத்தும் அதனை கிட்ட தட்ட நெருங்கியது கொல்கத்தா அணி. அந்த அணியின் பேட்டிங் சிறப்பாகதான் செயல்படுகிறது. அந்த அணியின் ரஸல் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தான் சற்று மோசமாக உள்ளது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினால் கொல்கத்தா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close