[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு - சென்னையில் முதல் போட்டி

ipl-2019-schedule-announced-for-first-2-weeks

ஐ.பி.எல் 2019ன் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு வெளியிட தாமதமாகி வந்தது. இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முதல் 17 போட்டிகளை மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6 அணிகள் குறைந்தது 4 போட்டிகளில் விளையாடுகின்றன. பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகிறது. எல்லா அணிகளும் குறைந்தது 2 போட்டிகள் சொந்த மைதானத்திலும் 2 போட்டிகள் வேறு மைதானத்திலும் விளையாடுகிறது. டெல்லி அணி மட்டும் 3 போட்டிகளை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. பெங்களூரு அணி 3 போட்டிகள் வேறு மைதானத்தில் விளையாடுகிறது.

ஐபிஎல் அட்டவணை விவரம்:

தேதி           கிழமை         நேரம்             அணிகள்                               இடம்

மார்ச் 23    சனி                மாலை     சிஎஸ்கே-ஆர்சிபி                    சென்னை
மார்ச் 24    ஞாயிறு        மதியம்     கேகேஆர்-எஸ்.ஆர்.ஹெச்    கொல்கத்தா
மார்ச் 24    ஞாயிறு        மாலை     எம்.ஐ-டிசி                                  மும்பை
மார்ச் 25    திங்கள்          மாலை    ஆர்.ஆர்-கே.எக்ஸ்.ஐ.பி          ஜெய்ப்பூர்
மார்ச் 26    செவ்வாய்    மாலை     டிசி-சிஎஸ்கே                            டெல்லி
மார்ச் 27     புதன்             மாலை    கேகேஆர்-கே.எக்ஸ்.ஐ.பி      கொல்கத்தா
மார்ச் 28    வியாழன்     மாலை    ஆர்சிபி-எம்.ஐ                           பெங்களூர்
மார்ச் 29    வெள்ளி         மாலை    எஸ்.ஆர்.ஹெச்- ஆர்.ஆர்     ஹைதராபாத்
மார்ச் 30    சனி                மதியம்    கே.எக்ஸ்.ஐ.பி-எம்.ஐ             மொஹாலி
மார்ச் 30    சனி               மாலை     டிசி-கேகேஆர்                          டெல்லி
மார்ச் 31   ஞாயிறு        மதியம்    எஸ்.ஆர்.கே-ஆர்சிபி              ஹைதராபாத்
மார்ச் 31   ஞாயிறு        மாலை    சிஎஸ்கே-ஆர்.ஆர்                   சென்னை
ஏப்ரல் 1    திங்கள்         மாலை    கே.எக்ஸ்.ஐ.பி-டிசி                  மொஹாலி
ஏப்ரல் 2    செவ்வாய்    மாலை    ஆர்.ஆர்-ஆர்.சி.பி                    ஜெய்ப்பூர்
ஏப்ரல் 3    புதன்              மாலை    எம்.ஐ-சிஎஸ்கே                     மும்பை
ஏப்ரல் 4  வியாழன்       மாலை    டிசி-எஸ்.ஆர்.ஹெச்              டெல்லி
ஏப்ரல் 5    வெள்ளி        மாலை    ஆர்.சி.பி-கேகேஆர்                பெங்களூர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close