[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

தேசியக் கொடியை தாங்கிப் பிடித்த தோனி ! - வைரலாகும் வீடியோ

ms-dhoni-ensures-indian-flag-doesn-t-touch-the-ground

மைதானத்துக்குள் வந்து தனது காலில் விழுந்த ரசிகரை தூக்காமல், அவர் கொண்டுவந்த இந்திய தேசிய கொடியை தூக்கிய தோனியின் செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தன்னுடைய நேர்த்தியான கேப்டன்ஷிப் மற்றும் ஆட்டத்திறனால் இந்திய அணிக்கு பல்வேறு கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார் தோனி. அவர் காலத்தில் இந்திய அணியில் ஒரு இளம்படையை உருவாக்கினார். பல்வேறு வெற்றிகளை குவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 

தேவையான நேரத்தில் ரன் குவித்தல், கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங், கடைசி நேர அதிரடி, எதிரே நிற்பவர்களின் அடுத்த நகர்வுகளை சரியாக கணித்தல் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோனி ஒரு காட்ஃபாதராகவே இருந்து வருகிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் இந்தியா - நியூஸிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது காவலர்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கொடியுடன் நுழைந்தார். அவர் நேராக கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனியிடம் ஓடி வந்து காலில் விழுந்து ஆசி பெற முயற்சித்தார்.

அப்போது அவர் கொண்டுவந்த இந்திய தேசியக் கொடியை கீழே போட்டுவிட்டு ஆசி பெற முயன்றார். அப்போது காலில் விழுந்த ரசிகரை தூக்குவதற்கு முன்னதாக கீழே கிடந்த தேசியக்கொடியை முதலில் கையில் எடுத்தார் தோனி . எந்த விதத்திலும் நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கபட்டுவிடக்கூடாது என தோனி செய்த இச்செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close