[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

“வீரர்கள் எல்லோரும் தோனியை வணங்குகிறார்கள்” மனம் திறக்கும் ரவி சாஸ்திரி

dhoni-is-great-with-the-team-mates-they-all-worship-him-ravi-shastri

அணியில் உள்ள மற்ற வீரர்கள் எல்லோரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வணங்குகிறார்கள் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழ்ந்துள்ளார். 

தன்னுடைய நேர்த்தியான கேப்டன்ஷிப் மற்றும் ஆட்டத்திறனால் இந்திய அணிக்கு பல்வேறு கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார் தோனி. அவர் காலத்தில் இந்திய அணியில் ஒரு இளம்படையை உருவாக்கினார். பல்வேறு வெற்றிகளை குவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

      

2018ம் ஆண்டு அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்துவிட்டது. கடுமையான விமர்சனங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில்தான், 2019ம் ஆண்டினை தோனி மிகவும் உற்சாகத்துடன் ஆரம்பித்துள்ளார். அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

              

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் (51, 55*, 87*) அடித்து அசத்தினார். அதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 33 பந்தில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

         

நேற்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை காட்டிலும், தோனி செய்த ஸ்டம்பிங்தான் சமூக வலைதளங்களில் வைரலானது. மின்னல் வேக ஸ்டம்பிங், 3ஜி, 4ஜி வேக அவரது ரசிகர்கள் பாராட்டி தள்ளினர். களத்தில் தோனியின் அனுபவம் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்று ஒரு விக்கெட்டும் 22 ரன்களும் விளாசிய கேதர் ஜாதவ் கூறியிருந்தார். மிடில் மற்றும் கடைசி கட்ட ஓவர் மொத்தத்தையும் தன்னுடைய தோளில் சுமந்து கொள்வார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

            

இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, “அணியில் உள்ள வீரர்களை பொறுத்தவரை தோனி மிகவும் சிறந்தவர். அவர்கள் தோனியை வணங்குகிறார். இந்த ஒட்டுமொத்த அணியும் அவரால் உருவாக்கப்பட்டது. ஏனெனில், அவர் 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்துள்ளார். ஓய்வு அறையில் அவர் மீதான மரியாதை எல்லோரிடமும் வெளிப்படும். அவரது அனுபவம் மிகப்பெரியது” என்று தோனி குறித்து புகழ்ந்துள்ளார்.

            

இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியில் தோனி 287இல் இடம்பெற்றுள்ளார். சச்சினுக்கு(307) அடுத்தப்படியாக அவரே உள்ளார். இதில் இருந்து அவரது அனுபவத்தை புரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close