[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாண்ட்யா உள்ளே வந்தால், விஜய் சங்கரின் நிலை? - கவாஸ்கர் கேள்வி

now-that-hardik-going-to-new-zealand-what-happens-to-vijay-shankar-sunil-gavaskar

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்பும் நிலையில், விஜய் சங்கரின் நிலை என்னவென்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திப் பட இயக்குனர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது பிரச்னையானது. இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ உத்தர விட்டது. சஸ்பெண்ட் நடவடிக்கையை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றிருந்த இருவரும் உடனடியாக நாடு திரும்பினர். 

           

இவர்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது. 

இதையடுத்து ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்கால தடையை பிசிசிஐ நேற்று திரும்ப பெற்றது. விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தடை நீக்கப்பட்டதை அடுத்து, பாண்ட்யா, நியூசிலாந்தில் விளையாடும் இந்திய அணியுடன் விரைவில் இணைகிறார். கே.எல்.ராகுல், இந்திய ஏ அணியுடன் இணைந்து விளையாடுகிறார். 

              

முன்னதாக, பாண்ட்யா, ராகுலுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். இதில் விஜய் சங்கருக்கு மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் வழங்கினார். 

             

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பும் பட்சத்தில் விஜய் சங்கரின் நிலை என்ன என்பது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார், “எதற்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்? எப்படி அவர்களிடம் விசாரணை நடத்தப்படாமல், சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது எப்படி?. 

           

அடுத்து வரும் உலகக் கோப்பை போட்டியில் பாண்ட்யா முக்கிய பங்கு வகிப்பார். அதனால், நியூசிலாந்து தொடருக்கு அவர் திரும்புவது நல்ல விஷயம். அப்படியென்றால், விஜய் சங்கரின் நிலை என்ன ஆவது?. அவர்கள் கடந்த இரண்டு போட்டிகளிலும் மோசமாக பந்துவீசவில்லை. ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். விஜய் சங்கர் இருக்கையில், பாண்ட்யாவின் நிலை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close