[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு

rishabh-pant-named-the-icc-men-s-emerging-player-of-the-year

2018-ஆம் ஆண்டின் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரராக ரிஷப் பன்ட்டை ஐசிசி அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட அணியை ஐசிசி அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டின் ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராட் கோலியை ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் இந்திய அணியின் ரிஷப் பண்ட்டை 2018-ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார் ரிஷப் பண்ட். 21 வயதான அவர், சிட்னி டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் விளாசியதோடு கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையையும் பெற்றார்.மேலும், ஆஸிக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலும் பன்ட் சதமடித்து அசத்தியிருந்தார்.

அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட்டில் அதிகப்படியான அதாவது 11 கேட்ச் பிடித்து முந்தைய சாதனையை சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close