[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

’தோனி அருகில் இருந்தா...’ சிட்னியில் ரோகித் சர்மா பேட்டி!

dhoni-s-role-is-very-important-rohit-sharma

’’தோனியின் அறிவுரை கேப்டனுக்கு உதவியாக இருக்கிறது’’ என்று இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, 12 ஆம் தேதி சிட்னியில் நடக்கிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி 15 ஆம் தேதி அடிலெய்டிலும் 3 வது ஒரு நாள் போட்டி 18 ஆம் தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.

இதற்கிடையே, ஒரு நாள் போட்டியில் விளையாடும் தோனி, தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்தனர். இவர்கள் சிட்னி மைதானத்தில் நேற்று கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா கூறும்போது, ‘’ தோனி, பல போட்டிகளை சிறப்பாக முடித்துக்கொடுத்தவர். பேட்டிங்கில் அவரது ரோல் முக்கிய மானது. அவரது அமைதியும் அறிவுரையும் அணிக்கு தேவையான ஒன்று. அணியின் வெற்றிக்காக பல விஷயங்களை அவர் தருகிறார். அவர் அணியில் இருப்பதே முக்கியமான விஷயம்தான். அவர் இருந்தால் அவரைச் சுற்றி அமைதியும் இருக்கும். கேப்டனுக்கு உதவியாகவும் இருக்கிறார். பின் வரிசையில் விளையாடி, ஆட்டத்தை முடித்து வைப்பது அணிக்கு தேவையான ஒன்று. அதை சிறப்பாக செய்பவர் தோனி.

உலக கோப்பை போட்டி பற்றி கேட்கிறார்கள். அதில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது. இந்த அணி யில் உள்ள வீரர்களே அதிகமாக இடம்பெறுவார்கள். அடுத்த சில மாதங்களில், ஃபார்ம் மற்றும் காயம் காரணமாக சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் ஒவ்வொரு வீரரின் ஃபார்மை கணக்கில் கொண்டே, அணியில் இடம் பிடிப்பது பற்றி உறுதியாகச் சொல்ல முடியும்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close