[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

“புஜாரா இருந்தா இந்தியாவுக்கு கஷ்டம்தான்” - ரிக்கி பாண்டிங்

i-think-it-s-always-hard-for-india-to-push-the-run-rate-along-when-pujara-s-there-ricky-ponting

புஜாரா விளையாடும் போதெல்லாம் இந்தியா கஷ்டப்பட்டுதான் ரன் சேர்க்கிறது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் விஹாரி 66 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். அதைத்தொடர்ந்து வந்த மாயாங் அகர்வால் 76 (161) ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மெதுவான ஆட்டத்தை இந்தியர்கள் வெளிப்படுத்திய போதிலும், விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடுகின்றனர் என்றே இது பார்க்கப்பட்டது. 

பின்னர் வந்த புஜாரா 319 பந்துகள் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் விராட் கோலி 82 (204) எடுத்தார். அத்துடன் ரஹானே 34 (76), ரோகித் ஷர்மா 63 (114) மற்றும் கீப்பர் ரிஷப் பண்ட் 39 (76) ரன்கள் எடுத்தனர். இதில் ரோகித் ஷர்மா மட்டும் தனது விக்கெட்டை இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. மொத்தம் 169.4 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் டிக்லர் செய்தது. இந்தியாவின் இந்த ஆட்டம் இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டது. இதையடுத்து 2ஆம் நாள் முடியும் நேரத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்கள் 8 ரன்கள் எடுத்து விக்கெட் எதுவும் இழக்காமல் உள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் மெதுவான பேட்டிங் குறித்து பேட்டியளித்து பாண்டிங், “இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு சிறந்த போட்டியாகும். ஆனால் அவர்களிடம் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை பந்துவீசி அவுட் செய்ய நேரமில்லை. ஆட்டத்திற்கு அவர்கள் அளித்த மதிப்பை இது காட்டுகிறது. எப்போதெல்லாம் புஜாரா களத்தில் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் இந்திய அணிக்கு ரன் சேர்ப்பதும், ரன் ரேட்டை உயர்த்துவதும் கஷ்டமாகிவிடுகிறது” என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close