[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

காயத்தோடு ஜடேஜாவை அழைத்துச் சென்றது ஏன்? சர்ச்சைக்கு விளக்கம்!

ravindra-jadeja-carried-injury-to-australia-was-only-70-80-fit-in-perth

சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை காயத்துடனேயே ஆஸ்திரேலிய தொடருக்கு அழைத்து சென்றது என்ற கிளம்பிய சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் சாதனை வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் காயத்தால் அவதிப்பட்டதால், மற்றொரு சுழல் பந்துவீச்சாளரான ஜடேஜா இந்தப் போட்டியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சேர்க்கப்படவில்லை. சுழல் பந்துவீச்சாளர் இல்லாமலேயே அந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

இதுபற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று கூறும்போது, ’குறை சொல்வதும், விமர்சிப்பதும் எளிதானது. அணியின் நலனுக்கு எது நல்லதோ அதைதான் செய்து வருகிறோம். அஸ்வின் காயத்தில் சிக்கியதால் பெர்த் டெஸ்டில் ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம் என்கிறார்கள். அப்போது ரவீந்திர ஜடேஜாவும் உடல்தகுதியுடன் இல்லை. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் 4 நாட்களுக்கு ஊசி போடப்பட்டது.

இந்தியாவில் இருந்த போதே தோள்பட்டை வலி இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். காயம் சரியாவதற்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகி விட்டது. பெர்த் டெஸ்டின் போது அவர் 70 முதல் 80 சதவீதம் வரைதான் உடல்தகுதியுடன் இருந்தார். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் 80 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் கூட அவரை களம் இறக்குவோம்’’ என்றார்.

ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில் தான் இருந்தார் என்று ரவிசாஸ்திரி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. காயமடைந்த வீரரை இந்த தொடருக்கு தேர்வு குழு எப்படி தேர்ந்தெடுத்தது? அதற்கு என்ன அவசியம்? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மாதம் 12 ஆம் தேதியில் முதல் 15 ஆம் தேதி வரை நடந்த ரஞ்சி போட்டியில், ஜடேஜா, காயம் ஏதுமின்றி பந்துவீசினார். அதைத்தொடர்ந்தே அவர் ஆஸ்தி ரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். சிட்னியில் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு ஊசி போடப்பட்டது. இப்போது காயம் குணமாகி அடுத்த டெஸ்ட்டில் விளையாட தகுதியுடன் இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close