[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

ஐபிஎல் 2019: ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது கோடிகளில் ஏலம்!

ipl-2019-auction-held-today-at-jaipur

பன்னிரெண்டாவது ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம், ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. 

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள், ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந் நிலையில் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று  நடக்கிறது. 

வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 50 பேரும் வெளிநாட்டு வீரர்கள் 20 பேரும் என 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் அணி 20.95 கோடியையும், பெங்களூரு அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா அணி ரூ.15.20 கோடியையும், மும்பை அணி 11.15 கோடியையும், ஐதராபாத் அணி ரூ. 9.70 கோடியையும்,சென்னை அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிடலாம். 

வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 11 வருடமாக ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லி இந்த முறை நடத்தவில்லை. ஹக் எட்மீட்ஸ் என்பவர் இந்த வருட ஏலத்தை நடத்துகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close