[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்!

india-vs-australia-oz-all-out-for-235-in-first-innings

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டில் தொடங்கி நடந்து வருகிறது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 எடுத்திருந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்களும் ரோகித் சர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டையும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 

பின்னர் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்சும் ஹாரிஸூம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பின்ச் விக்கெட்டை சாய்த்தார் இஷாந்த் சர்மா. ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து வெளியேறினார் பின்ச். அடுத்து உஸ்மான் கவாஜா, ஹாரிஸூடன் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். அவர்களின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். பின்னர் வந்த மார்ஷூம் அஸ்வின் சுழலில் போல்டாகி பெவிலியன் திரும்ப, ஹேண்ட்ஸ்கோம்பும் ஹெட்டும் ஆடி வந்தனர். 

ஹேண்ட்ஸ்கோம்ப் (34) விக்கெட்டை பும்ரா தூக்க, 120 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அவர் வெறும் 5 ரன்களில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் ஹெட் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரை சதம் கடந்தார்.  அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கம்மின்ஸ் 10 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்

நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே 15 ரன்கள் எடுத்திருந்த ஸ்டார்க், பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 66 ரன்களுடனும் லியானும் களத்தில் இருந்தனர். 

பின்னர் மழை நின்றதும் போட்டி தொடர்ந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹெட், 72 ரன்னில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹசல்வுட் விக்கெட்டையும் ஷமி சாய்த்தார். இதனால் அந்த அணி 235 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. லியான் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.


இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close